12.20.2012

இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன் நம் பண்டைக்கால கடற்கரை நகரம் பூம்புகாரையும் ஈஸ்டர் தீவு பற்றியும், ஜப்பான் மொழியின் மூலம் பற்றியும் அபோகாலிப்டோ படத்தையும், நினைவுகொள்ளவும். 

அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்)

  தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்?

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

  உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்துதமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.
  Olmec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள்இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.
  இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும்தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்குஇது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம்வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம்உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

கடலில் மூழ்கிய தமிழர்களின் வாணிகக் கப்பல்:
  நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

ஜப்பான் மொழியின் மூலம் தமிழ் மொழி?







 இயற்கையும் சரி, வரலாறும் சரி என்றுமே நமக்கு புரியாத புதிராகவே இருக்கும். சில வரலாற்று நிகழ்வுகள் நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரக்கூடியவை. யாருமே இதுதான் நடந்தது என உறுதிபடக்கூற முடியாது. ஆனால் ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் பதில்கள் என்றுமே சுவாரஸ்யத்துடன் ஆவலையும் கொடுப்பவை. அதில் ஒன்றுதான் ஜப்பான் மொழியின் மூலம் எந்த மொழி? தமிழா?



  ஜப்பான் மொழியின் எழுத்துமுறை சீன மொழியை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறு சீன எழுத்துமுறை கலப்பதற்கு முன்பாகவே (கி.மு.500 - கி.பி 300களில்) 7000 கிலோமீட்டர் பயணம் செய்து ஜப்பானில் அரிசி விளைவிக்கும் முறையைக் கற்றுக்கொடுக்க சென்ற தமிழர்கள் மொழியையும் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஜப்பானிய மொழி தமிழிலிருந்து சொற்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது ஓனோ அவர்களின் வாதம். அரிசியை உலகிற்கு (கிழக்கு நாடுகளுக்கு) விளைவிக்க கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். இதில் எவ்வித ஐயமும் கிடையாது. 

  ஜப்பானிய மொழியானது கி.மு.200க்கு முந்திய காலத்தில் ஆசியாவிலிருந்தோ அல்லது அருகிலுள்ள பசிபிக் தீவுகளிலிருந்து வந்தவர்களிடமிருந்தோதான் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. (ஆதாரம் - விக்கிபீடியா)